Ads Here

Thursday, September 28, 2017

டைட்டானிக் நடிகர் மரணம்

பிரபல இயக்குனர் ஜேம்ஸ் கேம்ருன் இயக்கிய டெர்மினேட்டர், ட்ரு லைஸ், டைட்டானிக் படங்களில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளவர் பில் பாக்ஸ்டன். சமீபத்தில் இவருக்கு அறுவை சிகிச்சை நடந்தது. இதனால் அவருக்கு சில எதிர்மறை விளைவுகள் ஏற்பட்டது. அதில் பாதிக்கப்பட்டு மரணம் அடைந்தார் என பாக்ஸ்டன் குடும்பத்தினர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
டெக்ஸாஸில் கடந்த 1955ம் ஆண்டு பிறந்த பாக்ஸ்டன் இதுவரை 90 படங்களில் நடித்துள்ளார். டுவிஸ்டர், எ சிம்ப்ள் லைப் போன்ற படங்களிலும் இவரது நடிப்பு பாராட்டு பெற்றது. ஃப்ரைல்டி. தி கிரேட்டஸ்ட் கேம் ஆகிய 2 படங்களையும் இயக்கி உள்ளார். மனைவி லுயிஸி நியூபரி, 2 குழந்தைகள் உள்ளனர்.

No comments:

Post a Comment