Ads Here

Friday, September 29, 2017

சர்வதேச பேட்மிண்டன் தரவரிசை: பி.வி.சிந்து இரண்டாவது இடத்துக்கு முன்னேற்றம்

பெண்களுக்கான பேட்மிண்டன் தரவரிசையில் இந்தியாவின் வெள்ளி மங்கை என வர்ணிக்கப்படும் பி.வி.சிந்து இரண்டாவது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
சர்வதேச பேட்மிண்டன் சம்மேளனம் வெளியிட்டுள்ள புதிய தரவரிசையின் படி, 5வது இடத்தில் இருந்த பி.வி.சிந்து இரண்டாவது இடத்துக்கு முன்னேறியுள்ளார். இது அவரது சிறந்த தரநிலையாகும்.
சமீபத்தில் இந்திய ஓபன் சூப்பர் சீரிஸின் சம்பியன் பட்டத்தை வென்றதன் மூலம் சிந்துவுக்கு இந்த ஏற்றம் கிடைத்துள்ளது.
மேலும், சீனத்தைபேயின் தாய் சூ யிங் முதலிடத்திலும், ஒலிம்பிக் சம்பியனான ஸ்பெயினின் கரோலினா மரின் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.

No comments:

Post a Comment